;
Athirady Tamil News

வவுனியா மதினா நகர் அல்-அக்சா முன்பள்ளி விளையாட்டு நிகழ்வு..!! (படங்கள்)

0

வவுனியா மதினா நகர் அல்-அக்சா முன்பள்ளி விழையாட்டு நிகழ்வு இன்று (08) பாடசாலையின் தலைவர் என்.எம்.இக்பால் தலைமையில் மதியா வித்தியாலய விழையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரத விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றியதுடன்,ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து விழையாட்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

விருந்தினர்கள் முன்பள்ளி மாணவர்களால் மாலைபோட்டு, பாண்ட வாத்தியங்களுடன் அழைத்து வரப்பட்டனர்.
நிகழ்வில் முன்பள்ளி மாணவர்களின் வரவேற்புரை உடற்பயிற்சி நிகழ்வு, விழையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது.

விழையாட்டில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அதிதிகளால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் எஸ்.எம்.பாரி, சமாதனா நீதவான் ஏ.ஆர்.எம்.பைசர், அல்மதினா விழையாட்டு கழகத் தலைவர் யு.அயூப்கான் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + fourteen =

*