;
Athirady Tamil News

பரபரப்படையும் கொழும்பு! – பதவியைத் துறந்தார் முக்கிய அமைச்சர்..!!

0

உட்பூசல்களால் நிலை தடுமாறியிருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் திடீர் திருப்பு முனையாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் மலிக் சமரவிக்ரம தனது இராஜினாமா கடிதத்தினை ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் உட்பூசல்கள் அதிகரித்து கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சி மறுசீரமைப்பு விடயங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. இதன் முதற்கட்டமாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை அமைச்சர் கபீர் ஹாசிம் ராஜினாமா செய்திருந்தார்.

கட்சியில் ஏற்படுத்தப்படவுள்ள மாற்றங்களை கருத்திற்கொண்டு, புதியவர் ஒருவரை நியமிப்பதற்கு இடமளித்து கபீர் ஹாசிம் ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கட்சியின் சிரேஷ்ட அமைச்சரான மலிக் சமரவிக்ரமவும் தனது பதவியில் இருந்து விலகியுள்ளமை கட்சி வட்டாரதில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five − three =

*