;
Athirady Tamil News

காணாமல் போனவர்கள் எங்கே? – உறுதிப்படுத்த முடியாதென்கிறார் ராஜித..!!

0

காணாமல் போனோர் தொடர்பில் சட்டரீதியாக உறுதிப்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை. இது தொடர்பாக நாம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே ராஜித மேற்குறித்தவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்-

”காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கமுடியாது. காரணம், கடந்த 1971இல் ஏற்பட்ட கிளர்ச்சியின் போது காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால், அவர்களில் சிலர் வெளிநாடுகளில் வாழ்வது பின்னர் கண்டறியப்பட்டது. ஆனால் நாம் வழங்கிய மரண சான்றிதழை மீளப்பெறுவதற்கான சட்ட ஏற்பாடுகள் இல்லை.

இந்நிலையில், நாம் வேறு ஏதாவது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றோம். குறிப்பாக, தற்காலிகமான சான்றிதழ்களை வழங்குவது குறித்து ஆலோசித்து வருகின்றோம். குறித்த சான்றிதழ்களை பயன்படுத்தி அரசாங்கம் வழங்கும் நட்டஈடுகள் உள்ளிட்டவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்.

காணாமல் போனவர்களின் உறவினர்களை நான் யாழ்ப்பாணத்தில் இரண்டு தடவைகள் சந்தித்தேன். அவர்களது பிரச்சினை, தமது உறவுகள் இறந்துவிட்டால் அவர்கள் இறந்துவிட்டனர் என்று கூறுமாறும் உறுதிப்படுத்துமாறும் கோரினர். ஆனால், சட்டரீதியாக உறுதிப்படுத்த முடியாத நிலை உள்ளது. ஆகவே, தற்காலிக சான்றிதழ்களை பெற்றுக்கொள்வார்களாயின் இறந்த தமது உறவினர்களுக்கான இழப்பீடுகளை பெற்றுக்கொள்ளலாம்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 + six =

*