;
Athirady Tamil News

சிரேஷ்ட அமைச்சர்களின் பதவிகள் பறிப்பு?..!!

0

ஐக்கிய தேசிய கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் சிரேஷ்ட அமைச்சர்களான ஜோன் அமரதுங்க மற்றும் காமினி ஜயவிக்ரம பெரேரா ஆகியோரை அமைச்சுப்பதவிகளில் இருந்து நீக்கும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் காரணமாகவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவின் இல்லத்தில், ரணில் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர்களுக்கு இடையில் விஷேட கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதன்போது, ஜோன் அமரதுங்க மற்றும் காமினி ஜயவிக்ரம பெரேரா ஆகியோரை பதவியில் இருந்து நீக்கிவிட்டு இளைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரை அந்தப் பதவிகளில் அமர்த்த ரணில் ஒப்புதல் வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இந்த முடிவிற்கு கூட்டத்தில் கலந்துகொண்ட முக்கியஸ்தர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், கட்சியின் தலைமைப்பொறுப்பே மாற்றப்படவேண்டும், மாறாக அமைச்சர்களை மாற்றம் செய்வது அவசியமற்றது என பிரதமருக்கு சுட்டிக்காட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 1 =

*