மட்டக்களப்பு ஆலய வளாகமொன்றிலிருந்து துப்பாக்கியொன்று மீட்பு..!!

மட்டக்களப்பு – அமிர்தகழியில் ஆலய வளாகமொன்றிலிருந்து துப்பாக்கியொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தீர்த்தக் குளத்தினை புனரமைக்கும் பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் இத்துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
இந்தியப் படையினர் இலங்கைக்கு வருகைதந்திருந்த காலத்தில் பாவிக்கப்பட்ட எஸ்.எம்.ஜி.ரக துப்பாக்கியே இவ்வாறு மீட்கப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட துப்பாக்கி தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.