;
Athirady Tamil News

தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியில் விபத்து..!!

0

தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியின் வட்டகொடை ஒக்ஸ்போட் பகுதியில் வாகனமொன்று விபத்துக்குள்ளாகியதில் சாரதியும் உடன் பயணித்தவரும் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

குறித்த வாகனம் வட்டகொடை பிரதேசத்தை நோக்கி பயணித்த வேளையிலேயே நேற்று (சனிக்கிழமை) இரவு 09.00 மணியளவில் தொலைபேசி கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

எதிரே தவறான பக்கத்தில் வாகனமொன்று வந்ததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்ததாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்விபத்து தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × four =

*