;
Athirady Tamil News

யுத்த காலத்தில் பாதிக்கப்பட்ட ஆலயங்களின் புனரமைப்புக்காக நிதி..!!

0

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் யுத்தகாலத்தில் பாதிக்கப்பட்ட ஆலயங்களின் புனரமைப்புக்காக வருடாந்தம் நிதிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து கலாசார அலுவல்கள் அமைச்சினால் குறித்த நிதி வழங்கி வைக்கப்பட்டது.

நாவற்குடா இந்து கலாசார நிலைய மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 55 ஆலயங்களுக்கும், அம்பாறை மாவட்டத்தில் 16 ஆலயங்களுக்கும் நிதிகள் வழங்கப்பட்டது. மேலும், காரைதீவில் விபுலானந்தர் மணி மண்டபம் அமைப்பதற்காக 2 மில்லியன் ரூபாய்க்கான கடிதமும் நிர்மாணக் குழுவினரிடம் கையளிக்கப்பட்டது.

சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதியொதுக்கீட்டின் கீழ் சுமார் 14 மில்லியன் புனரமைப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 3 =

*