;
Athirady Tamil News

அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 2 வீரர்கள் உயிரிழப்பு..!!

0

அமெரிக்காவின் கெண்டக்கி மாகாணத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இரண்டு ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் கெண்டக்கி மாகாணத்தின் ஃபோர்ட் கேம்பெல் பகுதியில் ராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பயிற்சியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த இரண்டு ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது கடந்த வாரத்தில் அமெரிக்காவில் நடைபெறும் நான்காவது ராணுவ விபத்தாகும். செவ்வாய்கிழமை கலிபோர்னியாவில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் அதில் பயணம் செய்த நான்கு பேர் உயிரிழந்தனர். புதன்கிழமை நெவாடாவில் நடந்த போர் விமான விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #KentuckyHelicopterCrash

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + three =

*