;
Athirady Tamil News

அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி, பரபரப்பை ஏற்படுத்திய நடிகை..! (வீடியோ) -இணைப்பு செய்தி-

0


தெலுங்கு நடிகைகளுக்கு எதிராக தெலுங்கு சினிமாவுலகில் நடைபெற்றுவரும் சம்பவங்களை ஸ்ரீ லீக்ஸ் மூலம் வெளிக்கொண்டுவந்த ஸ்ரீரெட்டி இன்று அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகளின் ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்கள் சுசி லீக்ஸ் என்ற பெயரில் வெளியாகி கோலிவுட் வட்டாரங்களை பரபரப்புக்கு உள்ளாக்கியது போல, தெலுங்கு சினிமாவுலகிலும் புதிதாகக் கிளம்பியுள்ள ஸ்ரீ லீக்ஸ் ஆட்டிப்படைக்கிறது.

தெலுங்கில் பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளைப் படுக்கைக்கு அழைத்துப் பாலியல் தொல்லை கொடுக்கும் பிரபலங்களின் பெயர்களை ஸ்ரீ லீக்ஸ் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடுவதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி அறிவித்தார்.

இந்தப் பதிவுக்கு எதிர்ப்புகள் வலுத்தபோதும், முதன்முறையாக முகம் தெரியாத ஒருவரது வீடியோவை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவைப் பற்றி வெளியிட்டார். இதன் காரணமாக சேகர் கம்முலாவுக்கும் ஸ்ரீரெட்டிக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது.

இருப்பினும் ஸ்ரீரெட்டி நேரடியாகவே சேகர் கம்முலா பெயரைக் குறிப்பிட்டு சவால் விட்டு, “என்னிடம் ஆதாரம் இருக்கிறது. சட்டப்படி எதையும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்” எனக் கூறி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இவரைத் தொடர்ந்து புதிதாக ஒரு தெலுங்கு நடிகர் பற்றி, “அந்த நடிகர் சினிமாவிலும், நிஜ வாழ்க்கையிலும் இயல்பாக நடிக்கத் தெரிந்தவர். யாரையும் உணர்வுபூர்வமாக அணுகிச் சிக்க வைப்பார். பல பெண்களைப் படுக்கையில் பயன்படுத்தியுள்ளார். ஒரு நாள் நிச்சயம் கடவுள் அவரைத் தண்டிப்பார்” எனக் குறிப்பிட்டார். எந்த நடிகரை அவர் குற்றம் சாட்டியுள்ளார் என்று தெலுங்குப் படவுலகில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இவரது இந்தக் கருத்துக்குத் தெலுங்குத் திரையுலகமும், நடிகைகளும் மறுப்புத் தெரிவித்தனர். இதனையடுத்து இவர் தெலுங்கு சினிமாவுலகில் நடிப்பதற்கான உரிமத்தினைத் தெலுங்குத் திரையுலகம் ரத்துசெய்தது.

இந்த நிலையில் தெலுங்கு திரைப்படத் துறையின் இந்த முடிவினை எதிர்த்தும், தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனக் கோரியும் இன்று திடீரென ஹைதராபாத் பிலிம் நகரில் தனது ஆடைகளைக் களைந்து அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டார் ஸ்ரீரெட்டி.

இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அவரது போராட்டத்தைத் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் ஆடைகளைக் களைந்து போராட்டத்தில் ஈடுபட்டதற்கான காரணத்தை விளக்கினார். “இங்கு இப்படிப்பட்ட போராட்டத்தை நான் மேற்கொண்டது விளம்பரத்திற்காக இல்லை. தெலுங்குத் திரையுலகில் இப்படியான வாய்ப்புகள்தான் அமைகின்றன.

உள்ளூர் நடிகைகளுக்கு வாய்ப்புகள் தர மறுக்கிறார்கள். மும்பை உள்ளிட்ட வெளிமாநிலத்தைச் சேர்ந்த நடிகைகளுக்கே முன்னுரிமை தருகிறார்கள். அப்படியே உள்ளூர் நடிகைகளுக்கு வாய்ப்புகள் அமைந்தாலும் அது ஆபாசக் காட்சிகளில் நடிப்பதற்கான வாய்ப்புகளாகவே அமைகின்றன” என்று விவரித்தார்.

தொடர்ந்து பேசியவர், “எனக்கு தெலுங்குத் திரையுலகில் நடிப்பதற்கு வாய்ப்பு தர மறுக்கிறார்கள். இதனால் நான் மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். தெலுங்கு நடிகர் சங்கத்திலும் எனக்கு உறுப்பினர் அட்டை வழங்க மறுக்கிறார்கள். உறுப்பினர் அட்டை எனக்கு வழங்காவிட்டால் நான் தற்கொலை செய்துகொள்வேன்” என்று கூறினார்.

இது குறித்து பெங்களூரு ஏசிபி கேஎஸ் ராகவ், “இந்த சம்பவங்கள் குறித்து அவர் எந்த வழக்கும் எங்களிடம் வந்து பதிவு செய்யவில்லை. பொது இடத்தில் அவர் இதுபோன்ற அநாகரிகமான காரியத்தைச் செய்து இடையூறு செய்திருக்கிறார். அவர் இது போன்ற செயலில் ஈடுபட்டதற்கான சிசிடிவி காட்சிகளைப் பார்த்த பிறகே அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 3 =

*