ஹங்கேரி பாராளுமன்ற தேர்தல் – நான்காவது முறையாக பிரதமராகிறார் விக்டர் ஆர்பன்..!!

ஹங்கேரி நாட்டில் சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 199 இடங்களுக்கு ஆளும் கட்சியான பிட்ஸ் கட்சியும், ஜோப்பிக் கட்சியும், இடதுசாரி கூட்டணி கட்சிகள் போட்டியிட்டன.
இந்நிலையில், பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று தொடங்கியது. இதில் முதலில் இருந்தே ஆளும் கட்சியான பிட்ஸ் கட்சி முன்னணி வகித்து வந்தது.
இறுதியில், ஆளும் கட்சியான பிட்ஸ் கட்சி 134 இடங்களிலும், ஜோப்பிக் கட்சி 26 இடங்களிலும், இடதுசாரி கூட்டணிகள் 20 இடங்களிலும் வென்றுள்ளதாக அந்நாட்டு தேசிய தேர்தல் அலுவலகம் அறிவித்துள்ளது.
இதன்மூலம் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை பிடித்த பிட்ஸ் கட்சி அங்கு ஆட்சியை அமைக்கிறது. மேலும், பிரதமர் விக்டர் ஆர்பன் நான்காவது முறையாக பிரதமர் பதவியை வகிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக கட்சி அலுவலகத்தில் பேசிய விக்டர் ஆர்பன், வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றுள்ளோம். வாக்களித்த மக்களுக்கு நன்றி என்றார். #Tamilnews