;
Athirady Tamil News

போயிங் 737 ரக விமானம் பறந்த நாள்: ஏப்.9- 1967..!!

0

அமெரிக்காவின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், தனது 737 ரக விமானத்தை முதன்முதலாக 1967-ம் ஆண்டு ஏப்ரல் 9-ந்தேதி சேவைக்கு விட்டது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

1953 – வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் முதல் முப்பரிமாணத் திரைப்படமான “ஹவுஸ் ஒவ் வக்ஸ்” (House of Wax) -ஐ வெளியிட்டது 1959 – மெர்க்குரித் திட்டம்: ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது விண்வெளி வீரர்கள் ஏழு பேரின் பெயர்களை நாசா அறிவித்தது. 1991 – ஜோர்ஜியா சோவியத் ஒன்றியத்திலிருந்து விடுதலையை அறிவித்தது.

1992 – முன்னாள் பனாமா அதிபர் மனுவேல் நொரியேகாவுக்கு ஐக்கிய அமெரிக்காவின் சமஷ்டி நீதிமன்றம் 30 ஆண்டுகால சிறைத்தண்டனை அளித்தது. 1999 – நைஜர் அதிபர் இப்ராகிம் மைனசாரா படுகொலை செய்யப்பட்டார். 2003 – ஈராக்கை அமெரிக்கக் கூட்டுப் படையினர் கைப்பற்றினர். சதாமின் 24 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − two =

*