;
Athirady Tamil News

கர்நாடக சட்டசபை தேர்தல் – முதல் கட்டமாக 72 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க…!!

0

கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் வருகிற மே 12-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தேர்தல் அறிவிக்கும் முன்னரே இரு கட்சியினரும் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ஜ.க. சார்பில் அமித்ஷாவும், காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 72 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை பா.ஜ.க. நேற்று வெளியிட்டுள்ளது.

பாஜக கட்சியின் உயர் மட்ட குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. அதில் பிரதமர் மோடி, தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் கட்சியின் மூத்த தலைவர் ஜே.பி.நட்டா கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ள 72 பேர் கொண்ட வேட்பாளர்கள் அடங்கிய முதல் கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளார்.

அப்போது அவர் கூறுகையில், முதல் மந்திரி வேட்பாளரான எடியூரப்பா சிகாரிபுரா தொகுதியிலும், மூத்த தலைவர்களான ஜகதீஷ் ஷெட்லர் ஹூப்ளி தார்வாட் மத்தியிலும், கே.எஸ்.ஈஸ்வரப்பா ஷிமோகா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என தெரிவித்தார். #Tamilnews #KarnatakaAssembly #Candidates #BJP

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × two =

*