வவுனியாவில் உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் முகமாக விற்பனை கண்காட்சி..!! (படங்கள்)

வன்னி முயற்சியாளர் 2018′ விற்பனை கண்காட்சி நேற்று (08) காலை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சோமரத்தன விதான பத்திரன தலைமையில் காமினி மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
வன்னி சிறு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களை சந்தைக்கு அறிமுகம் செய்யும் நோக்கிலும் அதற்கான சந்தை வாய்ப்பை பெற்றுக்கொடுககவும். வவுனியா மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு இக்கண்காட்சியை ஒழுங்குபடுத்தியுள்ளது.
விற்பனை கண்காட்சி கூடமானது வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டதுடன் விருந்தினர்கள் விற்பளை கண்காட்சி நிலயங்களையும் பார்வையிட்டனர். விற்பனை கண்காட்சியில் பல உள்ளூர் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி படுத்தபட்டதுடன் மூன்று நாட்களுக்;கு இக்கண்காட்சி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
நிகழ்வில் விருந்தினர்களாக வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கெ.கே. மஸ்தான், மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், உதவிபிரதேச செயலாளர் சாரதாயினி கர்ணன் ,ஆகியோர் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா
****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….