துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் சபைக்கு சென்ற சுயேச்சைக் குழு உறுப்பினர்கள்..!! (படங்கள்)

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கு சுயேச்சை குழுவாக போட்டியிட்டு தொிவு செய்யப்பட்டுள்ள சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் பதினொரு உறுப்பினர்களும் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் பிரதேச சபைக்குச் சென்றுள்ளர்.
இன்று 09-04-2018 காலை ஆறு மணியளவில் பிரதேச சபையின் உறுப்பினர்களும் முன்னாள் போராளிகள் சிலரும் கிளிநொச்சி கனகபுரம் மா வீரர் துயிலுமில்லத்திற்குச் சென்று விளக்கேற்றி மலர் தூவி அகவணக்கம் செலுத்திய பின்னர் சபையின் முதலாவது கூட்டத்திற்குச் சென்றுள்னர்.
தங்களில் தெரிவு செய்யப்பட்டுள்ள பதினொரு உறுப்பினர்களில் பலா் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அத்தோடு அனைவரும் போராட்டக் காகலங்களில் அதிக பங்களிப்புச் செய்தவர்கள் என்ற வகையிலும், நாங்கள் மாவீரர்களின் தியாகத்தை மதித்து எங்களின் மக்களுக்கான பணியை முன்னெடுக்கவுள்ளோம் என இரண்டு மாவீரர்களின் சகோதரியும், முன்னாள் போராளியுமான தயாபரன் சர்மிளா(நளினி) தெரிவித்தார்.
.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்
****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…