;
Athirady Tamil News

வட்­டு­வா­க­லில் 1.5 ஏக்­கர் காணி விடு­விப்பு..!!

0

மக்­க­ளுக்­குச் சொந்­த­மான 617 ஏக்­கர் நிலப்­ப­ரப்பை அப­க­ரித்து கோத்­த­பாய கடற்­ப­டைத் தளத்தை அமைத்து நிலை­கொண் டுள்ள இரா­ணு­வம் அந்­தத் தளத்­துக்கு அரு­கில் இருந்த சிறிய நிலப் பரப்பை விடு­வித்­துள்­ளது.

வட்­டு­வா­கல் பாலத்து அரு­கில் இருந்த மூன்று தனி­ந­பர்­க­ளுக்­குச் சொந்­த­மான 1.5 ஏக்­கர் காணியே இவ்­வாறு விடு­விக்­கப்­பட்­டுள்ளது. அந்­தக் காணி­யில் இருந்த இரா­ணு­வக் காவ­ல­ரண் மற்­றும் இரா­ணு­வத்­தி­ன­ரால் நடத்­தப்­பட்ட சிற்­றுண்­டிச் சாலை என்­பன அகற்­றப்­பட்­டுள்­ளன.

இலங்­கைப் படைப்­பி­ரி­வின் 68 ஆவது படை­யி­ன­ரின் முத­லா­வது பிரி­வி­னர் வட்­டு­வா­கல் பாலத்­துக்கு அரு­கில் இருந்த மூன்று தனி­பர்­க­ளுக்­குச் சொந்­த­மான 1.5 ஏக்­கர் காணி­யில் சிறிய காவ­ல­ரணை அமைத்­தி­ருந்­த­னர். அங்கு படை­யி­ன­ரின் தேனீர் சாலை­யை­யும் நடத்தி வந்­த­னர்.

காவ­ல­ர­ண­னுக்கு அரு­கில் நந்­திக்­க­ட­லில் தொழில் நட­வ­டிக்­கை­யில் ஈடு­ப­டும் மீன­வர்­கள் தங்­க­ளு­டைய வாக­னங்­களை விடக்­கூட இரா­ணு­வத்­தி­னர் தடை­வி­தித்­தி­ருந்­த­னர். காவ­ல­ரண் அமைந்­துள்ள நந்­திக்­க­டல் பகு­தி­யில் தொழில் செய்­ய­வும் தடை விதிக்­கப்­பட்­டி­ருந்­தது. அந்த நிலத்தை விடு­வித்து இரா­ணு­வத்­தி­னர் அங்­கி­ருந்து வெளி­யே­றி­யுள்­ள­னர்.

அந்­தக் காணி உறு­திக்­காணி என்­ப­தால் அதில் எல்­லை­யி­டும் நட­வ­டிக்­கை­யில் காணி உரி­மை­யா­ள­ரர்­கள் ஈடு­பட்டுள்­ள­னர்.

வட்­டு­வா­க­லில் கோத்­த­பாய கடற்­ப­டைத் தளம் அமைந்­துள்ள மக்­க­ளுக்­குச் சொந்­த­மான 617 ஏக்­கர் காணி­களை விடு­விக்­க­கோரி பெரும் போராட்­டங்­கள் இடம்­பெற்று வந்த நிலை­யில் அதை விடு­விக்­காது அரு­கில் இருந்த சிறிய நிலத்தை இரா­ணு­வம் விடு­வித்­துள்­ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − thirteen =

*