;
Athirady Tamil News

வடக்கு மாகாண சபையின் புதிய அமைச்சர்கள் மீதும் மோசடிக் குற்றச்சாட்டுக்கள்..!!

0

ஊழல், மோச­டிக் குற்­றச்­சாட்­டுக்­கள் சுமத்­தப்­ பட்ட வடக்கு மாகாண அமைச்­சர்­களை முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் பதவி நீக்­கி­யி ருந்தார். அவர்­க­ளுக்­குப் பதி­லாக புதி­தாக நிய மிக்­கப்­பட்ட அமைச்­சர்­கள் மீதும் தற்­போது மோசடிக் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

அமைச்­சர்­கள் தங்­க­ளது ஆள­ணி­யி­ன­ருக்கு உள்ள வெற்­றி­டங்­க­ளுக்கு நிய­மித்­த­வர்­க­ளு­டன், கூட்டு வங்­கிக் கணக்கு வைத்­தி­ருந்து, அவர்­க­ளது சம்­ப­ளப் பணத்­தை­யும் பெற்­றுக் கொண்­டுள்­ளமை கண்­ட றி­யப்­பட்­டுள்­ளது. அதே­போன்று, ‘பிக்­கப்’ வாக னம் பயன்­ப­டுத்­தா­ம­லேயே, அதற்­கு­ரிய எரி­பொ ருள் கொடுப்­ப­ன­வாக 75ஆயி­ரம் ரூபா­வைப் பெற்­றுக் கொள்­வ­தும் தெரி­ய­வந்­துள்­ளது.

முத­ல­மைச்­சர் தனது ஆள­ணி­யில் 15பேரை­யும், அமைச்­சர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் தமது தனிப்­பட்ட ஆள­ணி­யில் 10பேரை­யும் நிய­மிக்க முடி­யும்.
வடக்­கில் முத­ல­மைச்­சர் உள்­ளிட்ட 5 அமைச்­சர்­க­ளும் இந்த எண்­ணிக்­கை­யில் தமது தனிப்­பட்ட ஆளணி நிரப்­பப்­பட்­டுள்­ள­தா­கக் குறிப்­பிட்டு, அந்த ஆள­ணி­யி­ன­ருக்­கு­ரிய சம்­ப­ளம் அர­சால் வழங்­கப்­ப­டு­கின்­றது. தனிப்­பட்ட ஆள­ணி­யில் நிய­மிக்­கப்­பட்­ட­வர்­கள் வழங்­கிய வங்­கிக் கணக்­குக்கு பணம் வைப்­பி­லப்­ப­டு­கின்­றது.

வடக்­கில் புதி­தாக நிய­மிக்­கப்­பட்­ட­வர்­க­ளில் 3 அமைச்­சர்­க­ளின் அமைச்­சில் தமது தனிப்­பட்ட ஆள­ணி­யில் பெயர் குறிக்­கப்­பட்­ட­வர்­கள் பணி­யாற்­றா­மல், அமைச்­சி­லி­ருந்து அலு­வ­லர்­கள் பணி­யாற்­று­வது தெரி­ய­வந்­துள்­ளது.

தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டத்­தின் ஊடாக, ‘பிக்­கப்’ வாக­னத்தை அமைச்­சர் பயன்­ப­டுத்­து­கின்­றாரா என்று ‘உத­யன்’ கோரி­யி­ருந்­தது. அதற்கு அமைச்­சர் ஒரு­வர் ‘பிக்­கப்’ வாக­னத்­தைப் பயன்­ப­டுத்­து­வ­தா­க­வும், அது ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் பெறப்­பட்­டது என­வும், மாதாந்­தம் எரி­பொ­ருள் கொடுப்­ப­ன­வாக 75 ஆயி­ரம் ரூபா வழங்­கப்­ப­டு­வ­தா­க­வும் பதில் வழங்­கப்­பட்­டது.

ஆனால் எந்­த­வொரு அமைச்­ச­ரும் இது­வ­ரை­யில் ‘பிக்­கப்’ வாக­னம் பயன்­ப­டுத்­த­வில்லை.

மேலும், ஒரு அமைச்­ச­ரின், தனிப்­பட்ட ஆள­ணி­யில் பெயர் குறிப்­பி­டப்­பட்டு சம்­ப­ளம் பெறு­ப­வர் ஒரு­வரை, அந்த அலு­வ­ல­கத்­தில் பணி­யாற்­று­கின்­றாரா என்று அலை­பே­சி­யில் தொடர்பு கொண்டு கேட்­ட­போது, அப்­படி ஒரு­வர் பணி­யாற்­ற­வில்லை என்று பதில் வழங்­கப்­பட்­டது.

மற்­றொரு அமைச்­சர், தனது மக­ளின் பெய­ரை­யும் தனிப்­பட்ட ஆள­ணி­யில் குறிப்­பிட்டு வழங்­கி­யுள்­ளார். அவ­ரது மகள், அமைச்­சின் அலு­வ­ல­கத்­தில் பணி­யாற்­றி­யதே கிடை­யாது என்று அமைச்­சர் அலு­வ­ல­கத்­தில் பணி­பு­ரி­யும் அலு­வ­லர்­கள் தெரி­விக்­கின்­ற­னர். இந்த அமைச்­சர், தனது கட்­சி­யின் அலு­வ­ல­கத்­தையே, அமைச்­ச­ரின் உத்­தி­யோ­க­பூர்வ வதி­வி­ட­மா­கக் குறிப்­பிட்டு அதன் வாட­கைப் பணத்­தை­யும் பெற்­றுக் கொள்­கின்­றார்.

மூன்­றா­வது அமைச்­சர் தனது தனிப்­பட்ட ஆள­ணி­யில் பெயர் குறிப்­பி­டப்­பட்­ட­வர்­க­ளு­டன் கூட்டு வங்­கிக் கணக்கு ஏற்­ப­டுத்­தி­யுள்­ளார். அந்த வங்­கிக் கணக்கு இலக்­கத்­துக்கே சம்­ப­ளம் வைப்­பி­லப்­ப­டு­கின்­றது. அதனை மேற்­படி அமைச்­சர் எடுத்­துக் கொண்டு, அதில் ஒரு தொகையை மாத்­தி­ரமே தனிப்­பட்ட ஆள­ணி­யில் உள்­ள­வர்­க­ளுக்கு வழங்கி வந்­துள்­ளார். இந்த விட­யம் அமைச்­சின் அலு­வ­லர்­க­ளால் கண்­ட­றி­யப்­பட்டு முத­ல­மைச்­ச­ரி­டம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

முத­ல­மைச்­சர், அமைச்­ச­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. கூட்டு வங்­கிக் கணக்கை தனிப்­பட்ட வங்­கிக் கணக்­காக மாற்றி, அமைச்­சர் எடுத்­துக் கொண்ட பணத்தை மீள வழங்­கு­மாறே பணித்­துள்­ளார்.

இந்த விட­யம் தொடர்­பில் சம்­பந்­தப்­பட்ட அமைச்­ச­ரைக் கேட்­ட­போது, அவர் அப்­படி எது­வும் நடக்­க­வில்லை என்று மறுத்­துள்­ளார். இருப்­பி­னும் முத­ல­மைச்­சர் தான் மேற்­படி உத்­த­ர­வைப் பிறப்­பித்­ததை ஏற்­றுக் கொண்­டுள்­ளார். அமைச்­சர்­க­ளின் ஏனைய மோச­டிக் குற்­றச்­சாட்­டுக்­கள் தவ­றா­னது என்­றும் முத­ல­மைச்­சர் பதில் வழங்­கி­னார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × two =

*