;
Athirady Tamil News

வடக்கு, கிழக்­கில் 50ஆயி­ரம் வீட்­டுத் திட்­டம்: இந்­த­வார இறு­திக்­குள் ஒப்­பந்­தம் கைய­ளிப்பு..!!

0

வடக்கு -– கிழக்­கில் அமைக்­கத் திட்­ட­மி­டப்­பட்­டுள்ள 50 ஆயி­ரம் வீடு­க­ளுக்கான ஒப்­பந்­தம், இந்த வார இறு­திக்­குள் வழங்­கப்­ப­டும். இன்று அல்­லது நாளை கூட­வுள்ள கேள்­வி­கோ­ரல் சபை ஒப்­பந்­தத்தை வழங்­கும் என்று, தேசிய ஒரு­மைப்­பாடு மற்­றும் நல்­லி­ணக்க அமைச்சு வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

வடக்கு -– கிழக்கு மாகா­ணங்­க­ளில், அரச தலை­வ­ரின் கீழான தேசிய ஒரு­மைப்­பாடு மற்­றும் நல்­லி­ணக்க அமைச்சு ஊடாக 50ஆயி­ரம் வீடு­களைக் கட்­டு­வ­தற்கு கடந்த ஆண்டு வரவு -– செல­வுத் திட்­டத்­தில் முன்­மொ­ழி­ யப்­பட்­டி­ருந்­தது. ஜன­வரி மாத இறு­திக் காலத்­தில் வீடு­கள் அமைக்­கும் பணி­கள் ஆரம்­ப­மா­கும் என்று முன்­னர் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் மற்­றும் ஏனைய இழு­ப­றி­க­ளி­னால் இந்­தப் பணி தாம­திக்­கப்­பட்­டி­ருந்­தது. மூன்று மாதங்­க­ளின் பின்­னர் ஒரு­வா­றாக இந்­தப் பணி­கள் முடிவை நெருங்­கி­யுள்­ளன.

உள்­நாட்டு மற்­றும் வெளி­நாட்­டைச் சேர்ந்த 10 நிறு­வ­னங்­கள் ஒப்­பந்­தத்­துக்கு விண்­ணப்­பித்­தி­ருந்­தன. 5 நிறு­வ­னங்­கள் தெரிவு செய்­யப்­பட்­டன. தொழில்­நுட்­பக் குழு­வி­னால் அந்த நிறு­வ­னங்­கள் கடந்த வாரம் பரி­சீ­ல­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.

தொழில்­நுட்­பக் குழு தனது இறுதி அறிக்­கையை இன்று அல்­லது நாளை, கேள்­வி­கோ­ரல் சபைக்கு வழங்­கும். தொழில்­நுட்­பக் குழு­வின் இறுதி அறிக்­கை­யின் அடிப்­ப­டை­யில், ஒப்­பந்­தத்தை எந்த நிறு­வ­னத்­துக்கு அல்­லது எந்த நிறு­வ­னங்­க­ளுக்கு வழங்­கு­வது என்று கேள்வி கோரல் சபை தீர்­மா­னிக்­கும். இந்த வாரத்­துக்­குள் இந்­தப் பணி­கள் முடி­வ­டை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 5 =

*