;
Athirady Tamil News

கெப் வாகனத்தோடு மோதி ஒருவர் பலி..!!

0

பலாங்கொட – இரத்னபுரி வீதியில் பெல்மடுல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கெப் வாகனம் ஒன்றில் மோதியே நபர் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்த நபர் பெல்மடுல்ல வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 54 வயதான நபர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கெப் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பெல்மடுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 20 =

*