;
Athirady Tamil News

அறக்கட்டளை மூலம் வளர்க்கப்படும் நாய்களுக்கு பல கோடி ரூபாய் சொத்து..!!

0

குஜராத் மாநிலம் மெக்சனா என்ற இடத்தில் பஞ்சோத் என்ற கிராமம் உள்ளது.

மெக்சனாவில் இருந்து ரத்தன்பூர் செல்லும் பைபாஸ் சாலையில் இந்த கிராமம் அமைந்திருக்கிறது.

இங்கு தெருநாய்களை வளர்ப்பதற்கென்று தனியாக அறக்கட்டளை ஒன்றை 70 ஆண்டுகளுக்கு முன்பு கிராம மக்கள் தொடங்கினார்கள். இந்த நாய்களுக்காக பெரும் பணக்காரர்களிடமிருந்து நன்கொடையாக நிலம் பெறப்பட்டது. இவ்வாறு 8 ஏக்கர் நிலம் பெறப்பட்டிருந்தது.

அங்கு நாய்களுக்கு பாதுகாப்பு இல்லம் அமைக்கப்பட்டு அவை பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த இல்லத்தில் 70 நாய்கள் உள்ளன. அவற்றுக்கு தனியாக கொட்டகை அமைத்திருக்கிறார்கள்.

2 பெண்களை வேலைக்கு அமர்த்தி தினமும் உணவு தயாரித்து வழங்குகின்றனர். இதற்கும் மக்கள் நன்கொடை அளித்து வருகிறார்கள். உணவு தயாரிக்கப்படும் கோதுமை மாவை மில் அதிபர் ஒருவர் இலவசமாக கொடுத்து வருகிறார்.

கிராம மக்கள் தினமும் அந்த நாய்களுக்கு சேவை செய்வதை தங்களது முக்கிய பணியாக கருதி உதவி வருகிறார்கள்.

நாய்களுக்காக எழுதி வைக்கப்பட்டுள்ள நிலத்தின் அருகே பைபாஸ் சாலை செல்வதால் அந்த நிலத்தின் மதிப்பு மிகவும் உயர்ந்து விட்டது. ஒரு ஏக்கர் நிலம் அங்கு ரூ.14 கோடிக்கு விலை போகிறது. இதனால் 8 ஏக்கர் நிலம் ரூ.100 கோடிக்கு மேல் விலை மதிப்புள்ளதாக உள்ளது. இதனால் அங்குள்ள ஒவ்வொரு நாயும் ஒரு கோடிக்கு மேல் சொத்து கொண்டதாக கருதப்படுகிறது.

அந்த நிலத்தை பல்வேறு பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு ஆண்டும் ஏலம் விடுகிறார்கள். ஏலம் எடுத்தவர்கள் ஒரு ஆண்டுக்கு மட்டும் அதை அனுபவித்துக் கொள்ள வேண்டும்.

இதில் கிடைக்கும் பணத்தை பல்வேறு சேவை பணிகளுக்கு பயன்படுத்துகிறார்கள். இந்த அமைப்பு மூலம் மாடுகள் பராமரிப்பு மையம், பறவைகள் பராமரிப்பு மையம் ஆகியவையும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + fourteen =

*