;
Athirady Tamil News

யாழில் சட்ட விரோதமாக இயங்கிய கொல்களம்..!!

0

சாவ­கச்­சேரி நக­ர­ச­பை­யின் காணி­யொன்­றில் 15 அடி உயர மதில் அமைக்­கப்­பட்டு அத­னுள் கால்­ந­டை­கள் வளர்ப்­ப­தை­யும் தனி­யார் கொல்­க­ளம் அமைந்­தி­ருந்­த­தை­யும் சபை­யின் தவி­சா­ளர் பிர­தித் தவி­சா­ளர் உறுப்­பி­னர்­கள் கண்­ட­றிந்­துள்­ள னர் .

சபை­யி­ன­ரால் நேற்று சபை­யின் தொழி­லா­ளர்­கள் குடி­யி­ருப்­பு­கள் அமைந்­துள்ள பகு­தி­யில் சிர­ம­தா­னப் பணி­களை மேற்­கொள்­ளச் சென்­றி­ருந்த வேளை­யில் அப்­ப­கு­தி­யில் அமைக்­கப்­பட்­டுள்ள கால்­ந­டை­க­ளின் பண்­ணை­யி­னால் தமது சுகா­தா­ரத்துக்கு பாதிப்பு ஏற்­ப­டு­வ­தாக முறையிடப்பட்டது.

அதனையடுத்து தவி­சா­ளர் உள்­ளிட்ட உறுப்­பி­னர்­கள் சபை­யின் செய­லா­ளர் தொழில்­நுட்ப அலு­வ­லர் பொது சுகா­தார பரி­சோ­த­கர் ஆகி­யோ­ரு­டன் அப்­ப­குதி மக்­க­ளால் தெரி­வித்த இடத்­திற்­குச் சென்றனர்.

அங்­குள்ள தனி­யார் காணி­யொன்­றில் 15 அடி உய­ர­மான மதில் அமைக்­கப்­பட்டு அங்கு 50க்கு மேற்­பட்ட பசு மாடு­கள் உட்­பட மாடு­க­ளும் செம்­மறி ஆடு­க­ளும் காணப்­பட்­டன.

அத்­து­டன் மதி­லு­டன் இணைந்த நிலை­யில் கொல்­க­ள­மும் காணப்­பட்­டது.சபை­யி­டம் அனு­மதி பெறா­மல் இவற்றை அமைத்­துள்­ள­னர் என தெரி­வித்­த­தை­ய­டுத்து உட­ன­டி­யாக நீதி­மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்­வ­தோடு கொல்­க­ளத்தை அகற்­ற­வும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென தவி­சா­ளர் சிவ­மங்கை இரா­ம­நா­தன் தெரி­வித்­தார் .

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − four =

*