;
Athirady Tamil News

சாவகச்சேரி நக­ர­சபை உறுப்­பி­னர்­களின் அதிரடி நடவடிக்கைகள்..!!

0

சாவ­கச்­சேரி நகர சபை­யின் தொழி­லா­ளர் குடி­யி­ருப்­புப் பகு­தி­யில் சிர­ம­தா­னம் செய்­யச் சென்ற சாவ­கச்­சேரி நக­ர­ச­பை­யின் தவி­சா­ளர் உள்­ளிட்ட உறுப்­பி­னர்­கள் அங்­குள்ள நில­மை­களை நேரில் பார்த்து அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ள­னர்.

அந்தப் பகு­தி­யில் காணப்­ப­டும் வேலைத்­திட்­டங்­களை உடன் மேற்­கொள்­வ­தெ­ன­வும் இவ்­வ­ரு­டம் சபை நிதி­யில் மேற்­கொள்ள ஒதுக்­கப்­பட்ட வேலைத்­திட்­டங்­களை நிறுத்தி அதற்­கென ஒதுக்­கப்­பட்ட நிதி­யை இப் பகு­தி­யில் மேற்­கொள்­வ­தென தீர்­மா­னித்­துள்­ள­னர் என­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை சபை­யின் கன்னி அமர்வு இடம்­பெற்ற வேளை­யில் சபை­யின் பணி­யா­ளர்­கள் வதி­யும் கிரா­மம் சிர­ம­தா­னம் மூலம் துப்பு­ரவு செய்­யப்­ப­டல் வேண்­டு­மென உறுப்­பி­னர் க.சிவ­ரா­சா­வி­னால் தெரி­விக்­கப்­பட்ட முன்­மொ­ழி­வை­ய­டுத்து சபை­யின் ஏகோ­பித்த தீர்­மா­னப்­பி­ர­கா­ ரம் நேற்று சபை­யின் தவி­சா­ளர் பிர­தித் தவி­சா­ளர் ஏனைய 16 உறுப்­பி­னர்­கள் செய­லா­ளர் உள்­ளிட்ட அலு­வ­லர்­கள் பொது­மக்­கள் எனப் பலர் சிர­ம­தா­னத்­தில் பங்­கு­பற்­றி­யி­ருந்­த­னர் .

குடி­யி­ருப்­பு­க­ளில் காணப்­பட்ட அவல நிலை­க­ளைப் பார்­வை­யிட்டு அந்தப் பகு­தி­யில் அவ­ச­ர­மாக அபி­வி­ருத்­திப் பணி­களை மேற்­கொண்டு , பொது மக்­கள் பொது அமைப்­பு­க­ளின் பங்­க­ளிப்­பு­டன் சிர­ம­தா­னம் மேற்­கொள்­வ­தெ­ன­வும் முடிவு செய்­யப்­பட்­டது.

நேற்று கிரா­மத்­தில் சிர­ம­தா­னப் பணி­க­ளில் பெரு­ம­ள­வா­னோர் கலந்து கொண்­ட­னர் அங்­குள்ள நிலை­மை­க­ளைப் பார்­வை­யிட்ட தவி­சா­ளர் திரு­மதி சிவ­மங்கை இரா­ம­நா­தன் பிர­தித் தவி­சா­ளர் அ.பால­ம­யூ­ரன் உள்­ளிட்ட உறுப்­பி­னர்­கள் அங்­குள்ள மக்­க­ளு­டன் கலந்­து­ரை­யாடி அவ­சிய வேலைத்­திட்­டங்­களை மேற்­கொள்ள கிரா­மத்­தில் உள்ள இரு சன­ச­மூக நிலை­யங்­க­ளில் கூட்­டங்­களை நடத்தி முன்­மொ­ழி
வ­க­ளைப் பெற­வுள்­ள­தெ­ன­வும் தெரி­வித்­த­னர்.

மக்­க­ளின் கருத்­துப் பிர­கா­ரம் தற்­கா­லி­க­மா­கப் போடப்­பட்­டுள்ள சாலை யைத் தார்ச் சாலை­யாக மாற்­ற­வும் குடி­நீர் நீர்த்­தொட்டி,குழாய்க் கிணறு அமைக்­க­வும், குடி­நீர் தவிர்ந்த தேவை­க­ளுக்­குப் பயன்­ப­டுத்த அங்­குள்ள கிணற்றைச் சீர­மைத்து , வழங்­கு­வ­தெ­ன­வும் முடிவு செய்­யப்­பட்­டது.

இதற்­கான நிதிக்­கு­ரிய அங்­கீ­கா­ரத்தை எதிர்­வ­ரும் செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள விசேட கூட்­டத்­தில் சமர்ப்­பிக்­கு­மா­றும் உறுப்­பி­னர்­கள் தவி­சா­ள­ரைக் கேட்­டுள்­ள­னர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 2 =

*