;
Athirady Tamil News

களியாட்ட நிகழ்வுகள் மற்றும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துமாறு கவனயீர்ப்பு..!! (படங்கள்)

0

புதுவருடத்தையொட்டி களியாட்ட நிகழ்வு நடத்துவதை கண்டித்தும் வடக்கில் அதிகரித்து வரும் போதைப்பாவனையை கட்டுப்படுத்;தக்கோரியும் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (09) வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது.

தாயகத்தில் கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதாவின் தலைமையில் 410 ஆவது நாளாக போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில் வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் இவ் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அண்மையில் கொழும்பில் பிரபல ஊடகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையை கண்டித்தும் தமது பிள்ளைகளை தேடி தாம் 410 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மாவட்ட செயலகம் வர்த்தகர் சங்கம் பிரதேச செயலகம் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்களை ஒன்றிணைத்து இராணுவத்தினருடன் இணைந்து களியாட்ட நிகழ்வுகளை நடத்துவதை நிறுத்துமாறு போராட்டத்தின் போது கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பித்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + 10 =

*