;
Athirady Tamil News

பாடசாலைகள், முன்பள்ளிகளுக்கான அபிவிருத்தி மற்றும் தளபாடக் கொள்வனவிற்கு நிதி ஒதுக்கீடு..!!

0

பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கான அபிவிருத்தி மற்றும் தளபாடக் கொள்வனவிற்காக ரூபா முப்பது இலட்கம் வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். கனகரட்ணம் விந்தன் அவர்கள் ஒதுக்கியுள்ளார்

வடக்கு மாகாண சபையின் யாழ் மாவட்ட மாகாணசபை உறுப்பினரான என். கனகரட்ணம் விந்தன் தனக்குரிய 2018 ஆம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீட்டின் மூலம் பாடசாலைகள் முன்பள்ளிகளுக்கான புனரமைப்பு மற்றும் தளபாட கொள்முதல் என்பவற்றிற்காக ரூபா முப்பது இலட்சம் ஒதுக்கியுள்ளார்.

பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள், பெற்றோர்கள் தங்கள் தங்கள் பாடசாலைகளுக்கு மாகாணசபை உறுப்பினர் அவர்களை அழைத்துச் சென்று தங்கள் பாடசாலைகளின் தேவைகள் குறைகள் தொடர்பாக கலந்துரையாடியதைத் தொடர்ந்து, இத் தேவைகளின் முக்கியத்துவத்தை அறிந்த மாகாணசபை உறுப்பினர் முன்னுரிமை அடிப்படையில் நிதிகளை ஒதுக்கியுள்ளார்.

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி விளையாட்டு உபகரணங்கள் கொள்வனவுக்காக ரூபா ஒரு இலட்சம், யாழ். ஊ. புனித அந்தோனியார் கல்லூரி விளையாட்டு உபகரணங்கள் கொள்வனவுக்காக ரூபா ஒரு இலட்சம், யாழ். வேலணை சரஸ்வதி வித்தியாலயம் பாண்ட் (Band Set) வாத்தியக்கருவிகள் கொள்வனவுக்காக ரூபா ஒரு இலட்சத்து ஐம்பது ஆயிரம், யாழ். நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி வித்தியாலயம் கணினித் தொகுதி கொள்வனவுக்காக ரூபா ஒரு இலட்சம்,

யாழ். சுருவில் றோ.க.த.க பாடசாலை தளபாடக் கொள்வனவுக்காக ரூபா ஒரு இலட்சம், யாழ். சரவணை சின்னமடு றோ.க.த.க. பாடசாலை கணினித் தொகுதி கொள்வனவுக்காக ரூபா ஒரு இலட்சம், யாழ். புங்குடுதீவு சேர் துரைச்சுவாமி வித்தியாலயம் கணினித் தொகுதி கொள்வனவுக்காக ரூபா ஒரு இலட்சம், யாழ். அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயம் பிளாஸ்ரிக் கதிரைகள் கொள்வனவுக்காக ரூபா எழுபத்து ஐந்து ஆயிரம், யாழ். வேலணை மேற்கு நடராஜ வித்தியாலயம் தளபாடக் கொள்வனவுக்காக ரூபா ஐம்பது ஆயிரம், யாழ். பருத்தியடைப்பு கதிரேசானந்தா வித்தியாலயம் நிழற்படப்பிரதி இயந்திரம் (Photocopy Machine) கொள்வனவுக்காக ரூபா ஒரு இலட்சம்,

யாழ். புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணிய மகளிர் வித்தியாலயம் பிளாஸ்ரிக் கதிரைகள் கொள்வனவுக்காக ரூபா ஐம்பது ஆயிரம்ää யாழ். கொழும்புத்துறை சென். ஜோசப்ஸ் வித்தியாலயம் நிழற்படப்பிரதி இயந்திரம் (Photocopy Machine) கொள்வனவுக்காக ரூபா ஒரு இலட்சம், யாழ். கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயம் பாடசாலை மதில் புனரமைப்பு பணிகளுக்காக ரூபா ஒரு இலட்சத்து ஐம்பது ஆயிரம், யாழ். நெடுந்தீவு மாவிலித்துறை றோ.க.த.க. வித்தியாலயம் நிழற்படப்பிரதி இயந்திரம் (Photocopy Machine) கொள்வனவுக்காக ரூபா ஒரு இலட்சம்,

யாழ். அனலைதீவு தெற்கு அ.த.க. வித்தியாலயம் தளபாடக் கொள்வனவுக்காக ரூபா ஒரு இலட்சம், யாழ். அனலைதீவு வடலூர் த.க. வித்தியாலயம் நிழற்படப்பிரதி இயந்திரம் (Photocopy Machine) கொள்வனவுக்காக ரூபா ஒரு இலட்சம், யாழ். அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலயம் விளையாட்டு உபகரணங்கள் கொள்வனவுக்காக ரூபா ஒரு இலட்சம், யாழ். சரவணை நாகேஸ்வரி மகா வித்தியாலயம் கணினித் தொகுதி கொள்வனவுக்காக ரூபா ஒரு இலட்சம், யாழ். புங்குடுதீவு றோ.க.த.க. பாடசாலை கணினித் தொகுதி கொள்வனவுக்காக ரூபா ஒரு இலட்சம், யாழ். வேலணை செட்டிபுலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை கணினித் தொகுதி கொள்வனவுக்காக ரூபா ஒரு இலட்சம், முல். வவுனிக்குளம் பாலிநகர் குமாரசாமி வித்தியாலயம் சமையலறை நிர்மாணப்பணிகளுக்காக ரூபா இரண்டு இலட்சத்து ஐம்பது ஆயிரம், யாழ். புனித மரியன்னை பாலர் பாடசாலை பாண்ட் (Band Set) வாத்தியக்கருவிகள் கொள்வனவுக்காக ரூபா ஐம்பது ஆயிரம்,

யாழ். புங்குடுதீவு மேற்கு காந்தி முன்பள்ளி புனரமைப்புப் பணிகளுக்காக ரூபா ஐம்பது ஆயிரம், யாழ். அல்லைப்பிட்டி சென். பிலிப்ஸ் முன்பள்ளி தளபாடக் கொள்வனவுக்காக ரூபா ஐம்பது ஆயிரம், யாழ்.ஒக்சிலீயம் முன்பள்ளி, வேம்படி வீதி, யாழ்ப்பாணம் சிறுவர் பூங்கா அமைப்பதற்காக ரூபா ஒரு இலட்சம், ஊர்காவற்றுறை உப்புக்குளம் வீதி அண்ணா சனசமூக நிலைய முன்பள்ளி பாண்ட் (Band Set) வாத்தியக்கருவிகள் கொள்வனவுக்காக ரூபா ஐம்பது ஆயிரம், யாழ். அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய முன்பள்ளி தளபாடக் கொள்வனவுக்காக ரூபா ஐம்பது ஆயிரம்,

யாழ். புங்குடுதீவு நண்பர்கள் முன்பள்ளி சுற்றுமதில் அமைக்கும் பணிகளுக்காக ரூபா எழுபத்து ஐந்து ஆயிரம், நயினாதீவு அண்ணா சனசமூக நிலைய முன்பள்ளி சிறுவர் பூங்கா அமைப்பதற்காக ரூபா ஒரு இலட்சம், யாழ். எழுவைதீவு புனித தோமையார் முன்பள்ளி தளபாடக் கொள்வனவுக்காக ரூபா ஐம்பது ஆயிரம், யாழ். அனலைதீவு நாவலர் முன்பள்ளி புனரமைப்புப் பணிகளுக்காக ரூபா ஐம்பது ஆயிரம், யாழ். வேலணை வங்களாவடி மத்திய சிறுவர் முன்பள்ளி புனரமைப்புப் பணிகளுக்காக ரூபா ஐம்பது ஆயிரம், யாழ். சின்னமடு மாதா முன்பள்ளி புனரமைப்புப் பணிகளுக்காக ரூபா ஐம்பது ஆயிரம், கரம்பன் புனித திரேசா (ஞான ஒளி) முன்பள்ளி புனரமைப்புப் பணிகளுக்காக ரூபா ஐம்பது ஆயிரம் என ரூபா முப்பது இலட்சம் ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × four =

*