;
Athirady Tamil News

முப்படைகளின் தளபதி ஜனாதிபதி தலைமையில்..!! (படங்கள்)

0

மாதுறு ஓயா இராணுவ பயிற்சிப் பாடசாலையில் பயிற்சி பெற்று வெளியேறும் நிகழ்வு முப்படைகளின் தளபதி ஜனாதிபதி தலைமையில்

தாய் நாட்டுக்காக தமது கடமைகளை நிறைவேற்றும் படைவீரர்களுக்கு அரசாங்கம் அனைத்து வசதிகளையும் வழங்கும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

மாதுறு ஓயா இராணுவ பயிற்சிப் பாடசாலையில் பயிற்சி பெற்று வெளியேறும் நிகழ்வு இன்று முற்பகல் முப்படைகளின் தளபதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மாதுறு ஓயா இராணுவ பயிற்சிப் பாடசாலையின் 48ஆவது ஆரம்ப பயிற்சிப் பாடநெறியை பயின்ற ஏழு அதிகாரிகளும் ஏனைய பதவி நிலைகளைச் சேர்ந்த 189 பேரும் பயிற்சிகளை நிறைவுசெய்து வெளியேறினர்.

பேண்ட் வாத்தியம், பரசூட் கண்காட்சிகள் என்பனவற்றுடன் மிகச் சிறப்பாக இடம்பெற்ற இந் நிகழ்வில் சிறந்த மாணவர் மற்றும் திறமையான உடற்பயிற்சி மாணவராக இரண்டாவது லெப்டினன் டபிள்யூ.எம்.கே.ஆர். வணிகசூரிய மற்றும் சிறந்த குறிபார்த்துச் சுடும் வீரராக லெப்டினன் ஈ.எம்.பி.டி. ஏக்கநாயக்க ஆகியோர் ஜனாதிபதியிடமிருந்து விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, பாதுகாப்புப்படை தமது சேவைகளை நிறைவேற்றும் போது ஆயுதங்களினால் மட்டுமன்றி அறிவு, இயலுமை, ஆக்கத்திறன் என்பவற்றினாலும் பலம்பெற்று அவர்களது திறமைகளை வெளிக்காட்ட வேண்டும் என்று தெரிவித்தார். இதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் சலுகைகளையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் வருகையை நினைவுகூறும் முகமாக மாதுறுஓயா இராணுவ பயிற்சிப் பாடசாலை வளாகத்தில் ஜனாதிபதி நாக மரக்கன்று ஒன்றை நாட்டியதுடன், அங்குள்ள மூலிகைப் பூங்காவையும் பார்வையிட்டார்.

இந்த நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரத்ன, பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, மாதுருஓய இராணுவ பயிற்சிப் பாடசாலையின் கட்டளைத் தளபதி கேர்ணல் எம்.ரி.யு. மகலேக்கம் ஆகியோர் உள்ளிட்ட பாதுகாப்புப் பிரதானிகள் கலந்துகெண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 + 8 =

*