;
Athirady Tamil News

முல்லைத்தீவிலிருந்து இராணுவத்தின் முகாமொன்று அகற்றப்பட்டது..!!

0

முல்லைத்தீவில் நந்திக்கடல் பிரதேசத்தில் உள்ள இராணுவத்தின் கண்காணிப்பு முகாமொன்று இராணுவத்தினரால் அகற்றப்பட்டுள்ளது.

இராணுவத்தினர் முல்லைத்தீவு மற்றும் பரந்தன் பிரதான வீதிப் போக்குவரத்தை கண்காணிப்பதற்காக குறித்த முகாமையும் உணவகம் ஒன்றினையும் நந்திக்கடல் பிரதேசத்தில் அமைத்திருந்தனர்.

இறுதி யுத்தத்தின் போது வட்டுவாகலைக் கைப்பற்றிய படையினர், ஒன்பது வருடங்களின் பின்னர் இந்த கண்காணிப்பு முகாமை வெளியேற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − twelve =

*