;
Athirady Tamil News

மாதுறு ஓயா கத்தோலிக்க தேவாலய புதிய கட்டடம் ஜனாதிபதியினால் திறப்பு..!! (படங்கள்)

0

மாதுரு ஓயா மீனவர் கிராமத்திலுள்ள கத்தோலிக்க தேவாலயத்தின் புதிய கட்டடத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று திறந்து வைத்தார்.

‘எழுச்சிபெறும் பொலன்னறுவை’ மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சமயஸ்தாபனங்களை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித் திட்டத்திற்கேற்ப சுமார் 60 லட்சம் ரூபா செலவில் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

மீனவர் கிராமத்திலுள்ள மக்களின் வீட்டுப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது. அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்

மேலும் அப்பிரதேசத்திலுள்ள பிள்ளைகளின் கல்வி சுகாதாரப் பிரச்சினை உள்ளிட்ட ஏனைய தேவைகளையும் கண்டறிந்து நிறைவேற்றிக் கொடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இந்த நிகழ்வில் பிரதேசத்தின் சமயத்தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + 1 =

*