;
Athirady Tamil News

பரி­சுப் பொதியை நம்பி ரூ.20 லட்­சம் இழந்த பெண்..!!

0

முக­நூல் ஊடாக அறி­மு­க­மாகி, பிரிட்­ட­னி­லி­ருந்து பரிசை அனுப்பி வைப்­ப­தா­கக் கூறி, மாத்­தறை ஹித்­தெட்­டி­ய­வைச் சேர்ந்த 34 வய­தான பெண்­ணி­டம் 20 லட்­சத்து 52 ஆயி­ரத்து 500 ரூபாவை கும்­பல் ஒன்று மோசடி செய்­துள்­ள­தாக மாத்­த­றைப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

மாத்­தறை நக­ரில் தனி­யார் நிறு­வ­னத்­தில் தொழில் புரி­யும் பெண்ணை, பிரிட்­ட­னில் இருப்­ப­தா­கக் கூறப்­ப­டும் சந்­தேகநபர் முக­நூல் மூலம் அறி­மு­க­மா­கி­யுள்­ளார். இதன் பின்­னர் வட்ஸ்­அப் மூலம் தொடர்பு கொண்டு பெண்­ணு­டன் ஆங்­கி­லத்­தில் உரை­யா­டி­யுள்­ளார்.

பெண்­ணுக்­குப் பரி­சாக அனுப்ப விரும்­பும், ஆடை அணி­கள், தங்­கச் சங்­கி­லி­கள், ஆப­ர­ணங்­க­ளின் படங்­களை அவர் அனுப்­பி­யுள்­ளார். செல­வுக்­காக 32 ஆயி­ரம் யூரோக்­களை பரிசுப் பொதி­யு­டன் அனுப்­பு­வ­தாக சந்­தேகநபர் கூறி­யுள்­ளார். இத­னை­ய­டுத்து சில தினங்­க­ளுக்கு முன்­னர் பெண்ணை வட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்ட மற்­று­மொரு நபர், நண்­பன் வழங்­கிய பரிசுப் பொதியை எடுத்து வந்­துள்­ள­தா­க­வும் அதனை சுங்கத் திணைக்­க­ளத்­தில் இருந்து விடு­விக்க பணத்தை அனுப்­பு­மா­றும் கூறி­யுள்­ளார்.

இந்த அறி­விப்­புக்கு அமைய, கடந்த மார்ச் மாதம் 16ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை­யான 5 நாள்­கள், இளம்­பெண், 20 லட்­சத்து 52 ஆயி­ரத்து 500 ரூபாவை, சந்­தேகநபர் வழங்­கிய வங்­கிக் கணக்­கில் வைப்­புச் செய்­துள்­ளார்.

பரி­சுப் பொதியை அனுப்பி வைக்க வேண்­டு­மா­யின் மேலும் மூன்று லட்­சம் ரூபா தேவை­யெ­னக் கூறப்­பட்­ட­தா­லும் பரிசுப் பொதி உறு­தி­ய­ளித்­தப்­படி கிடைக்­காத கார­ணத்­தாலும் சந்­தே­க­ம­டைந்த பெண் இது குறித்துப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­துள்­ளார். இத­ன­டிப்­ப­டை­யில், பொலி­ஸார் விசா­ர­ணைகளை ஆரம்­பித்­துள்­ள­னர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 4 =

*