;
Athirady Tamil News

3 குழந்தைகளை கிணற்றில் தள்ளி தாய் தற்கொலை..!!

0

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் மூன்று குழந்தைகளுடன் பிழைப்பு தேடி மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி மாவட்டத்திற்கு வந்தனர். அங்கு இருவரும் சாலை போடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு கணவன்-மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மனைவி இன்று காலை தனது மூன்று பெண் குழந்தைகளை கிணற்றில் தள்ளி தானும் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவனுடன் ஏற்பட்ட தகராறில் பெண் மூன்று குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − 6 =

*