;
Athirady Tamil News

நேபாளத்திலிருந்து கடத்தப்பட்ட 18 குழந்தைகள் மீட்பு – 3 பேர் கைது..!!

0

இந்தோ-நேபாளம் எல்லைப்பகுதியான ருபெய்டிகா பகுதியிலிருந்து 18 குழந்தைகளை மூன்று பேர் கொண்ட கடத்தல் கும்பல் கடத்தியது. 12 லிருந்து 14 வயது கொண்ட இக்குழந்தைகளை சிம்லா மற்றும் மும்பை நகரங்களுக்கு கடத்த உள்ளதாக தகவல் வந்தது.

இதையடுத்து, எஸ்எஸ்பி பாதுகாப்பு படையினைச் சேர்ந்த வீரர்கள் சோதனையில் ஈடுபட்டனர். நேற்று மாலை கடத்தல் கும்பலைச் சேர்ந்த 3 பேரை உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 18 குழந்தைகளை மீட்டனர். விசாரணைக்கு பிறகு குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

குழந்தைகள் கடத்தல் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடத்தலில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × four =

*