;
Athirady Tamil News

மகனை மரப்பெட்டியில் பூட்டி வைத்திருந்த தந்தை கைது..!!

0

ஜப்பானில் மனநலம் பாதித்த மகனை 20 ஆண்டுகளுக்கும் மேலாக மரப்பெட்டியில் தந்தை பூட்டி வைத்திருந்ததால் காவல் துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் சாண்டா நகரில் வசிக்கும் யமசாகி என்பவரின் மகன் மனநிலை பாதிக்கப்பட்டவர். யமசாகி மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகனுக்குச் சிகிச்சை ஏதும் மேற்கொள்ளாமல், அவரை சரிவர கவனித்துக்கொள்ளாமல் மரப்பெட்டியில் அடைத்து வைத்துள்ளார். மேலும், மனநிலை பாதிக்கப்பட்டவரை சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மரப்பெட்டியில் அடைத்து வைத்திருந்ததற்காகக் காவல் துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு மீட்டர் உயரப் பெட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்டவருக்குத் தற்போது 42 வயதாகிறது. உணவு, நீர் மட்டும் மரப்பெட்டியைத் திறந்து அவர் தனது மகனுக்கு வழங்கியுள்ளார்.

மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதால் சில நேரங்களில் மோசமான வன்முறைகளில் ஈடுபடுவதால் மகனை அடைத்து வைத்ததாக கைதான தந்தை யமசாகி தெரிவித்துள்ளார்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக மரப்பெட்டியில் அடைக்கப்பட்டிருந்ததன் காரணமாக தற்போது முதுகு வளைந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டவர் உள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் காவல் துறையினர் சேர்த்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 4 =

*