;
Athirady Tamil News

டெல்லியில் உண்ணாவிரதத்துக்கு முன் சாப்பிட்ட காங்கிரசார்..!!

0

மத்திய அரசை கண்டித்தும், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சி நேற்று நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தியது. டெல்லி ராஜ்காட்டில் நடந்த உண்ணாவிரதத்தில் ராகுல் காந்தி மற்றும் மாநில தலைவர் அஜய் மக்கான் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்கு முன் அஜய் மக்கான், லவ்லி உள்ளிட்ட டெல்லி மாநில தலைவர்கள் சிலர் உணவகம் ஒன்றில் சாப்பிட்டனர். அவர்கள் சாப்பிடும் புகைப்படங்களை பா.ஜனதா தலைவர் ஹரிஷ் குரானா தனது டுவிட்டரில் வெளியிட்டு காங்கிரசாரை கிண்டல் செய்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘வாவ்… நமது காங்கிரஸ் தலைவர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்குமாறு மக்களை அழைத்துவிட்டு, அவர்கள் மட்டும் உணவகத்தில் சாப்பிட்டு இருக்கின்றனர். இதன் மூலம் மக்களை அவர்கள் முட்டாளாக்கி விட்டனர்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பா.ஜனதாவினருக்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் லவ்லி கூறும்போது, ‘காலை 10.30 மணிக்கு தான் உண்ணாவிரதம் தொடங்கியது. இதற்கான தயாரிப்புகளில் நேற்று நள்ளிரவு வரை நாங்கள் ஈடுபட்டு இருந்தோம். பின்னர் காலை 8 மணிக்கு நாங்கள் காலை உணவை உண்டோம். எனவே போராட்டத்துக்கு சில மணி நேரத்துக்கு முன்னே உணவு உண்டதில் எந்த தவறும் இல்லை’ என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − ten =

*