;
Athirady Tamil News

மகாராஷ்டிராவில் சாலையோர தடுப்பில் லாரி மோதி கோர விபத்து – 17 பேர் பலி..!!

0

மகாராஷ்டிரா மாநிலம் சதாரா – புனே நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு மினிலாரி சென்று கொண்டிருந்தது. கந்தாலா பகுதி அருகே லாரி வந்த போது அங்குள்ள வளைவு ஒன்றில் திரும்பியது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்பில் பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் லாரியில் இருந்த 17 பேர் பலியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் 15-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 + sixteen =

*