;
Athirady Tamil News

இலங்கை இளைஞர்களுக்கு பிரதமர் ரணில் விடுத்துள்ள அழைப்பு…!!

0

இலங்கையின் கிராமங்களை அபிவிருத்தி செய்யும் முயற்சிகளில் இளைய சமுதாயம் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படவேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன்படி, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கீழ் அமுலாக்கப்படும் ‘யூத் வித் ரலன்ட் கிராமத்திற்கு கோடி’ என்ற நிகழ்ச்சியின் வெற்றியாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு அலரிமாளிகையில் நேற்று நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர், நாட்டின் உற்பத்திகளை அதிகரித்து ஏற்றுமதியானது வளர்ச்சி காணச் செய்ய வேண்டுமெனவும் கூறினார்.

பொருளாதாரத்தை கட்டியெழுப்புகையில் வேகமாக செல்ல வேண்டிய சந்தர்ப்பங்களில் வேகமாகவும், மெதுவாகச் செல்ல வேண்டிய தருணங்களில் மெதுவாகவும் பயணிப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

மேலும், அரசாங்கம் கடன்பளு சுமத்தப்பட்ட நாட்டையே பொறுப்பேற்றது என குறிப்பிட்ட அவர், முதல் இரண்டு வருடங்களில் பணம் தேட வேண்டிய நிர்ப்பந்தம் எழுந்தது என்றும், தற்போது அபிவிருத்திப் பணிகளில் நிதி செலுத்தப்பட்டுவருகிறது என்றும் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 3 =

*