;
Athirady Tamil News

கண்டி வன்முறைகள் இராணுவ கோப்ரல் தர அதிகாரிகள் இருவர் கைது…!!

0

ஸ்ரீலங்காவின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் முஸ்லீம்கள் மீது அண்மையில் கட்டவிழ்த்துவிடப்பட்ட இன வன்முறைகள் தொடர்பில் இராணுவ கோப்ரல் தர அதிகாரிகள் இருவர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

ஸ்ரீலங்கா பொலிஸ் திணைக்களத்தின் பயங்கரவாதத் தடுப்புப் பிரலிவு பொலிசாரே இராணுவ சேவையில் கடமையாற்றிவரும் கோப்ரல் தர அதிகாரிகள் இருவரையும் நேற்று கைதுசெய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளர்.

கண்டி மாவட்டத்தின் திகன மற்றும் தெல்தெனிய பகுதியில் முஸ்லீம் மக்களை இலக்கு வைத்து கடந்த மார்ச் நான்காம் திகதி முதல் கட்டவிழ்த்துவிடப்பட்ட இன வன்முறைகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் ஸ்ரீலங்கா இராணுவத்தைச் சேர்ந்த கோப்ரல் தர அதிகாரிகள் இருவரை கைது செய்துள்ளனர்.

மார்ச் மாதம் ஆறாம் திகதி திகன – பூஜாபிட்டிய பகுதியிலுள்ள முஸ்லீம் பள்ளிவாசல்கள் மற்றும் பௌத்த விகாரை சேதமாக்கப்பட்ட சம்பவங்களுடன் இந்த இராணுவ கோப்ரல் தர அதிகாரிகள் இருவருக்கும் தொடர்பிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்தே பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிசார் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

புத்தளம் 143 படை முகாமில் கடமையாற்றிவரும் 34 வயதுடைய கோப்ரல் அநுர பண்டார விஜயசிறி என்பவரும், பயிலுநர் பயிற்சிபாடசாலையின் கோப்ரல் மல்லவகே கெதர விஜயவர்தன என்பவருமே கைதுசெய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

பூஜாபிட்டிய அம்பத்தென்ன பகுதியிலுள்ள முஸ்லீம்களின் வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்திய சம்பவங்களுடன் கோப்ரல் தர அதிகாரிகளுக்கு தொடர்பிருப்தாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இவர்களைத் தவிர கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

ஏற்கனவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் குண்டசாலை பிரதேச சபைக்காக போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினரை மார்ச் 28 ஆம் திகதிபயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்து சிறையில் வைத்துள்ளனர்.

அதேவேளை முஸ்லீம்கள் மீதான இன வன்முறைகள் தொடர்பில் பிரதான சூத்திரதாரியாகக் கருதப்படும் மஹாசோனா படையணியின் தலைவரான அமீத் ஜீவன் வீரசிங்க கைதுசெய்யாப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + eight =

*