;
Athirady Tamil News

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நபர் கைது…!!

0

வெல்லவாய – ஹதபானகல, ரன்தெனிகொடயாய பிரதேசத்தில் 09 வயதுடைய சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் மாமன் முறைாயான ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

31 வயதான சந்தேகநபர் சில வருடங்களாக அவரது மனைவியை பிரிந்து தனிமையில் வசித்து வருவதாக கூறப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட சிறுமி தந்தையை இழந்து பாட்டியின் பொறுப்பில் வசித்து வந்துள்ளார்.

ஒரு மாத காலத்திற்கு முன்பு இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதுடன்,

தற்போது சிறுமி வைத்திய பரிசோதனைக்காக வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 1 =

*