;
Athirady Tamil News

வவுனியா பூங்கா வீதியில் விபத்து -இளைஞன் படுகாயம்…!!

0

வவுனியா நூலக வீதியில் இன்றையதினம் (10-04.2018) காலை 10.45மணியளவில் வேன் மற்றும் மோட்டாா் சைக்கிள் மோதியதில் இளைஞா் ஒருவா் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது……

வவுனியா மின்சாரசபை வீதியிலிருந்து வைரவப்புளியங்குளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் பூங்கா வீதியின் மறுபக்கம் திரும்ப முற்பட்ட சமயத்தில் எதிர் திசையிலிருந்து மன்னாா் வீதி நோக்கி பயணித்த வேன் மோதி விபத்திற்குள்ளானதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

இந்த விபத்தில் மோட்டாா் சைக்கிளின் சாரதி கயாமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.மேலதிக விசாரணைகளை பொலிஸாா் மேற்கொண்டு வருகின்றனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − one =

*