;
Athirady Tamil News

மட்டக்களப்பு கரடியனாற்றில் உள்ளூர் துப்பாகியுடன் இருவர் கைது…!!

0

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் இருவரை கைது செய்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த பிரதேசத்தில் பொலிஸார் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டபோதே இந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 5 =

*