;
Athirady Tamil News

அத்துமீறி விகாரை அமைக்கும் பணியை பார்வையிட்ட வடமாகாண சபை உறுப்பினர்கள்…!!

0

வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடந்த சபை அமர்வில் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இன்றையதினம்(10-04-2018) காலை முல்லைத்தீவுக்கு வருகை தந்த வடமாகாண சபை உறுப்பினர்கள் முல்லைத்தீவில் மக்களது வாழ்விடங்களை பறி குடுக்கும் நிலையில் உள்ள பல்வேறு இடங்களுக்கும் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் தனியார் காணியில் அத்துமீறி விகாரை அமைக்கும் பணி இடம்பெறும் பகுதிக்கு சென்று அங்கு இடம்பெறும் பணிகள் குறித்து காணி உரிமையாளருடன் கேட்டறிந்ததோடு வடமாகாண சபை உறுப்பினர் து ரவிகரன் நிலைமைகள் தொடர்பில் விளக்கியதோடு ஒருதொகுதி உறுப்பினர்கள் விகாரை விகாராதிபதியுடன் நிலைமைகளை கேட்டறிந்தனர்.

அத்துடன் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை வளாகத்தில் ஒன்றுகூடிய உறுப்பினர்கள் மாவட்டத்தில் நில ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த குழுவில் வடமாகாண சபை அவைத்தலைவர் சி வி கே சிவஞானம் மற்றும் பிரதி அவை தலைவர் வ கமலேஸ்வரன் விவசாய அமைச்சர் க சிவநேசன் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் கல்வி அமைச்சர் க சர்வேஸ்வரன் சுகாதார அமைச்சர் ஞா குணசீலன் மற்றும் சபை உறுப்பினர்கள் ஆகியோர் குறித்த குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

முதலமைச்சர் இந்த குழுவில் வருகை தரவில்லை பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா ஆரம்பத்தில் முல்லைத்தீவுக்கு வருகைதந்திருந்த போதும் குறித்த இடங்களை பார்வையிட வருகை தரவில்லை.

இந்த நிலையில் குறித்த குழு மாலை 3 மணிக்கு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தி மாவட்ட செயலாளரிடம் மகஜர் ஒன்றை கையளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + 8 =

*