;
Athirady Tamil News

கரைத்துறைபற்று “புளொட்” உறுப்பினரின் மோட்டார் சையிக்கிள் மீதான தாக்குதல்.. விபத்தா?சதியா??

0


கரைத்துறைபற்று புளொட் உறுப்பினரின் மோட்டார் சையிக்கிள் மீதான தாக்குதல்.. விபத்தா?சதியா?

புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(DPLF) மத்திய குழு உறுப்பினரும் கடந்த உள்ளாட்சி தேர்தலில் கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவருமான தவராஜா மாஸ்ரர் பயணம் செய்த மோட்டார் சையிக்கிள் மோதுண்டு அவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் தமிழரசு கட்சி உறுப்பினர் ஆவார். இவ்நிலையிலே மேற்படி சம்பவம் தமிழரசு கட்சியின் சதி நடவடிக்கையாக இருக்காலாமோ என்ற சந்தேகம் பலரிடமும் ஏற்பட்டுள்ளது.

தவிசாளர், உபதவிசாளர் தெரிவில் தவராஜா மாஸ்ரர் வெல்லக் கூடிய சாத்தியகூறுகள் உள்ளதால் தமிழரசு கட்சி சதியை மேற்கொண்டிருக்கலாம் என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது.

ஏற்கனவே வேட்பாளர் தெரிவின் போதும் புளொட் சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளர், தமிழரசு கட்சியினரால் மிரட்டப்பட்டு தேர்தலில் அவ் வேட்பாளர் போட்டியிடாமல் விலக்கப்பட்டார். இவ்நிலையில் பிறிதொரு பெண் வேட்பாளரை புளொட் களம் இறக்கி அவ் வேட்பாளரும் புளொட் சார்பாக உள்ளாட்சி சபை உறுப்பினரானார்.

இவ்வாறான நிலையில் தான் தவராஜா மாஸ்ரரின் மோட்டார் சையிக்கிள் விபத்தா? சதியா?? என்ற சந்தேகம் எழுவதற்கு காரணமாகியது. உண்மை எதுவென்பதை? காலம் தான் சொல்ல வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − eleven =

*