;
Athirady Tamil News

மிகப்பெரிய விமான நிலையம் எதிர்வரும் 20 ஆம் திகதி திறப்பு..!!

0

பாகிஸ்தானின் மிகப்பெரிய சர்வதேச விமானநிலையம் இஸ்லாமாபாத் நகரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விமானநிலையத்தின் கட்டுமான பணிகள் கடந்த 2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

பல பிரச்சனைகளுக்கு பின்னர் விமானநிலையம் கட்டுமான பணிகள் நிறைவுபெற்றுள்ளது. சடார் மற்றும் ராவால்பிந்தி ஆகிய இரு நகரங்களை இணைத்து இந்த விமானநிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விமானநிலையம் எதிர்வரும் 20 ஆம் திகதி பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக ஆண்டிற்கு 15 மில்லியன் பயணிகள் உபயோக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் விரிவாக்கப்பணிகள் முடிவடைந்த பின் 25 மில்லியன் பயணிகள் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் சர்வதேச விமான நிலையங்களிலேயே இந்த விமானம நிலையம் மிகப்பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × four =

*