;
Athirady Tamil News

13 லட்சம் கோடியில் மிகப்பெரிய சூரிய ஒளி மின்திட்டம்…!!

0

எண்ணெய் வளம் மிக்க நாடான சவுதி அரேபியாவில் உலகிலேயே மிகப் பெரிய சூரிய ஒளி மின் திட்டம் தொடங்கப்படவுள்ளது.

ரூ.13 லட்சம் கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. சவுதி அரேபியாவின் நிதி நிறுவனமும் ஜப்பானின் சாப்ட் டேங்க் குரூப் கார்ப்பரேசன் நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.

அதற்கான ஒப்பந்தம் நியூயார்க்கில் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.

இந்த ஆண்டில் ரூ.32 ஆயிரம் கோடி செலவில் இத்திட்டம் தொடங்கப்படுகிறது. இதன்மூலம் 7.2 ஜிகா வாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அது படிப்படியாக உயர்த்தப்பட்டு 2030 ஆம் ஆண்டில் 200 ஜிகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அப்போது அதன் முதலீடு ரூ.13 லட்சம் கோடியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது உலகில் தற்போதுள்ள சூரிய ஒளி மின் திட்டங்களை விட 100 மடங்கு பெரியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 3 =

*