;
Athirady Tamil News

செல்போனுக்காக கொலை செய்யப்பட்ட சிறுவன் – ஆம்பூரில் பயங்கரம்…!!

0

வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த அழகாபுரி 2வது தெருவை சேர்ந்தவர்கள் கூலித்தொழிலாளி சங்கர் வினோதினி. இவர்களது முதல் குழந்தையான கிஷோர்குமார் (வயது 8) இவர் உமர்ரோட்டில் உள்ள நகராட்சி துவக்கப்பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 5 ஆம் தேதி பள்ளிக்கு சென்று வீட்டில் தனது புத்தகப்பையை வைத்து விட்டு வெளியில் வந்த மாணவன் வெகுநேரம் ஆகியும் வீடுத்திரும்பவில்லை. அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீட்டில் தேடியும் கிடைக்காத நிலையில் அவரது சங்கர் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன் ஆம்பூர் அருகே உள்ள பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள பாழடைந்த கிணற்றில் அவ்வழியாக சென்றவர்கள் துர்நாற்றம் விசுவதாக கிணற்றை பார்த்தப்போது சிறுவன் சடலமாக மிதந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.அங்கு வந்த தீயணைப்பு வீரார்கள் சடலத்தை மிட்டனர். சடலமாக இருந்த சிறுவன் காணாமல் போன கிஷோர்குமார் என்பது தெரியவந்தது.

சடலத்தை கைப்பற்றி போலீசார் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியை சேர்ந்த 6 ஆம் வகுப்பு பயிலும் மாணவன் விக்னேஷ் கிஷோர் குமாரிடம் செல்போனை திருடிக்கொண்டு அவனை கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்துள்ளான் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து விக்னேஷ்னை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளி சேர்த்தனர். செல்போனுக்காக நான்காம் வகுப்பு மாணவனை கொலை செய்த சம்பவம் ஆம்பூர் பகுதி பொது மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − 14 =

*