;
Athirady Tamil News

ஐபிஎல் போட்டி.. செருப்புகள் அணிந்துவர தடையில்லை.. பயன்படுத்துவோம்…!!

0

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடாத மத்திய அரசுக்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டத்தினை திசை திருப்பிடும் வகையில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினரின் எதிர்ப்பை மீறி சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

போட்டியின்போது மைதானத்தில் எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக ரசிகர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொடிகள், பேனர்கள், செல்போன், லேப்டாப், கேமரா, பட்டாசுகள், ஊதுகுழல்கள், தண்ணீர் பாட்டில் உட்பட எதையுமே உள்ளே எடுத்துச் செல்லக் கூடாது என்று மைதான நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அனுமதி டிக்கெட் தவிர வேறு எதுவுமே ரசிகர்களிடம் இருக்கக் கூடாது என்று போலீஸாரும் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும், தினகரன் ஆதரவாளருமான செந்தில்பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், ஐபிஎல் போட்டி.. செருப்புகள் அணிந்துவர தடையில்லை.. பயன்படுத்துவோம் என கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பினை கிளப்பியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four − one =

*