;
Athirady Tamil News

ஐபிஎல் போட்டி.. அண்ணா சாலையில் தவாகவினர் மறியல் போராட்டம்…!!

0

தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனையான காவிரி பிரச்சனையில் அரசியலை புகுத்தும் பாஜக அரசின் செயற்பாட்டினை கண்டித்து தமிழகம் முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. மேலும், எளிய மக்களின் வாழ்வாதாரத்தினை அழித்துப்போடக்கூடிய நியூட்ரினோ, ஸ்டெர்லைட் உள்ளிட்ட நாசகார திட்டங்களுக்கு எதிராகவும் கடுமையான போராட்டங்கள் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. தமிழக வாழ்வாதாரங்களையும் – உரிமைகளையும் காத்திடவே எளிய மக்கள் களத்தில் நின்று போர்க்குரல் எழுப்பிவருகிற சூழலில் அவர்களின் கவனத்தை திசை திருப்பும் வண்ணம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளை இரத்து செய்யுமாறு இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும், ஐபிஎல் நிர்வாகத்திற்கும் பல்வேறு அரசியல் கட்சிகளிலும், இயக்கங்களும் கோரிக்கை விடுத்திருந்தன.

ஆனால், ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ள மைதானத்திற்கு அதிகளவிலான பாதுகாப்பு அளிக்கப்பட்டு இன்னும் சற்று நேரத்தில் போட்டிநடத்தப்படவுள்ளது. இதற்காக சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் சேப்பாக்கம் மைதானத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஐபிஎல் போட்டியை தடை செய்யக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சென்னை அண்ணா சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களை காவல்துறை கைது செய்துவருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + 18 =

*