;
Athirady Tamil News

சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட சென்ற விசிகவினர் கைது…!!

0

காவிரி மேலாண்மை வாரியத்தினை அமைத்திட வேண்டுமென வலியுறுத்தி தமிழகம் ஒருமித்த குரலில் போராடிவரும் சூழலில் சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகள் மேலாண்மை வாரியத்திற்கு எதிரான போராட்டங்களை மழுங்கடிக்கச்செய்யும் என்பதால் ஐபிஎல் போட்டிகளை தள்ளிவைக்க வேண்டும் அல்லது வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையினை கடந்த சில நாட்களாகவே அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் முன்வைத்துவந்தன.

ஆனாலும், ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ள மைதானத்திற்கு அதிகளவிலான பாதுகாப்பு அளிக்கப்பட்டு போட்டிநடத்தப்படவுள்ளது. இதற்காக சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் சேப்பாக்கம் மைதானத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஐபிஎல் போட்டியை தடை செய்யக்கோரி சென்னை திருவல்லிக்கேணியில் இருந்து மைதானத்திற்கு பேரணியாக சென்றனர் விசிகவினர். அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போதிய அழுத்தம் தர வக்கில்லை.. ஐபிஎல் போட்டிக்கு அரசே பாதுகாப்பு அளிப்பதா என முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 + twenty =

*