;
Athirady Tamil News

வலுக்கும் எதிர்ப்பு.. முடங்கிய அண்ணா சாலை.. நடக்குமா ஐபிஎல் போட்டி…!!

0

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியத்தினை அமைத்திடாத மத்திய பாஜக அரசினைக் கண்டித்து தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்துவரக்கூடிய சூழலில், அவற்றை மழுங்கடிக்க செய்திடும் வகையில் சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளதால் அதனை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர் பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும்.

ஆனால், ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ள மைதானத்திற்கு அதிகளவிலான பாதுகாப்பு அளிக்கப்பட்டு இன்னும் சற்று நேரத்தில் போட்டிநடத்தப்படவுள்ளது. இதற்காக சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் சேப்பாக்கம் மைதானத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை, நாம் தமிழர் கட்சி, எஸ்டிபிஐ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் மாணவர்களின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றுருவருகிறது. போராட்டக்காரர்களை சமாளிக்க இயலாமல் திணறிவருகிறது காவல்துறை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − one =

*