;
Athirady Tamil News

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைக்கப்பட்ட புதிய வீரரும், வெற்றியை பெற்று கொடுத்தும் விலகிய முக்கிய வீரர்களும்..!! (படங்கள்)

0

ஐ.பி.எல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய வீரர் ஒருவர் இணைக்கப்பட்டுள்ளார்.

11 ஆவது ஐ.பி.எல் போட்டி கடந்த 7 ஆம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இப் போட்டி கடந்த 7 ஆம் திகதி முதல் எதிர்வரும் மே மாதம் 27 ஆம் திகதி வரை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெறவுள்ளது.

இதனடிப்படையில் கடந்த 7 ஆம் திகதி சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதிய முதலாவது போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. இப் போட்டியில் சென்னை அணி வீரர் கேதர் யாதவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஐ.பி.எல் தொடரிலிருந்து கேதர் யாதவ் விலகியுள்ளார். இதனடிப்படையில் கேதர் யாதவின் இடத்திற்கு இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் டேவிட் வில்லே இணைக்கப்பட்டுள்ளதாக, இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் அணி தெரிவித்துள்ளது.

சென்னை அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்தும் விலகிய முக்கிய வீரர்

ஐ.பி.எல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து கேதர் யாதவ் விலகியுள்ளார்.

11 ஆவது ஐ.பி.எல் போட்டி கடந்த 7 ஆம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இப் போட்டி கடந்த 7 ஆம் திகதி முதல் எதிர்வரும் மே மாதம் 27 ஆம் திகதி வரை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெறவுள்ளது.

இதனடிப்படையில் கடந்த 7 ஆம் திகதி சென்னை மற்றும் மும்பை அணிகள் முதலாவது போட்டியில், மும்பை வான்கடே மைதானத்தில் மோதியுள்ளன. இருஅணிகளுக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் 4 ஆவது வீரராக சென்னை அணி சார்பில் களமிறங்கிய கேதர் யாதவ் 13 ஆவது ஓவரில் காயம் காரணமாக ரிட்டையர்டு கார்ட் மூலம் மைதானத்தை விட்டு வெளியேறியுள்ளார். தொடர்ந்து கடைசி விக்கெட்டாக களமிறங்கி சென்னை அணியை வெற்றி பெற செய்துள்ளார்.

இந்நிலையில் அணிக்கு வெற்றி பெற்று தந்தாலும் தொடர்ந்து விளையாட முடியாததால் ஐ.பி.எல் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − nine =

*