;
Athirady Tamil News

மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் விலகல்…!! (படங்கள்)

0

மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் விலகியுள்ளார்.

கடந்த 7 ஆம் திகதி முதல் 11 ஆவது ஐ.பி.எல் போட்டி ஆரம்பமாகியுள்ளது. இப் போட்டி மே மாதம் 27 ஆம் திகதி வரை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப் போட்டியின் முதலாவது போட்டி 7 ஆம் திகதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றுள்ளது.

இப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இதனடிப்படையில் நடைபெற்ற போட்டிக்கு முன், அவுஸ்ரேலியா அணி தென்னாபிரிக்கா அணியுடன் விளையாடிய போட்டியில், அவுஸ்ரேலியா அணி வீரர் பேட் கம்மின்ஸ்கு முதுகு எலும்பில் லேசான முறிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையிலும் முதலாவது ஐ.பி.எல் போட்டியில் விளையாடிய பேட் கம்மின்ஸ், தொடர்ந்து விளையாட முடியாமல் விலகியுள்ளதாக அவுஸ்ரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − eleven =

*