;
Athirady Tamil News

எதிர்ப்பிற்கு மத்தியில் சென்னை அணி, போராடி கொண்டிருக்கும் கொல்கத்தா அணி…!! முழு விபரம் (படங்கள்)

0

எதிர்ப்பிற்கு மத்தியில் சென்னை அணியின் முடிவு

சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதும் 5 ஆவது போட்டி ஆரம்பமாகியுள்ளது.

11 ஆவது ஐ.பி.எல் போட்டி கடந்த 7 ஆம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இன்று சென்னையில் 5 ஆவது போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

இதனடிப்படையில் இன்று சென்னையில் இப் போட்டி நடைபெறவுள்ளதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், மற்றும் ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை போன்ற காரணங்களால், ஐ.பி.எல் போட்டிக்கு எதிர்ப்புக்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் ஆரம்பமாகிய போட்டியில், சென்னை அணி டாஸ் வென்று பந்து வீச்சை தீர்மானித்துள்ளது.

போராடி கொண்டிருக்கும் கொல்கத்தா அணி – வெல்லுமா சென்னை அணி ?

சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்துவரும் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் இடையேயான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய தேர்ந்து எடுத்தது.இதனையடுத்து நடந்த பரபரப்பான ஆட்டத்தில் 16 வர்கள் முடிவில் கொல்கத்தா அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்துள்ளது.தினேஷ் கார்த்திக் மற்றும் ரஸ்ஸல் இருவரும் மைதானத்தில் ஆடி கொண்டிருக்கிறார்கள்.

ரவீந்திர ஜடேஜா,ஹர்பஜன் சிங்க்,ஷான் வாட்சன்,ஷர்டுல் தாகூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர்,ராபின் உத்தப்பா ரன் அவுட் ஆகியுள்ளார்.இப்பொழுதுவரை ஆட்டம் சென்னை அணிக்கு சாதகமாக இருப்பதாகவே பலர் கருதுகின்றனர்.

சேப்பாக்கம் மைதானத்தில் செருப்பு வீசிய போராட்டக்காரர்கள் கைது.

சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதும் 5 ஆவது போட்டி ஆரம்பமாகியுள்ளது.11 ஆவது ஐ.பி.எல் போட்டி கடந்த 7 ஆம் தேதி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் சென்னையில் இன்று 5 ஆவது போட்டி நடைபெறுகிறது.

இதில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய தேர்ந்து எடுத்தது.

இதனடிப்படையில் இன்று சென்னையில் நடைபெறவுள்ளதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், மற்றும் ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை போன்ற காரணங்களால், ஐ.பி.எல் போட்டிக்கு எதிர்ப்புக்கள் எழுந்த வண்ணமே இருந்தது.இதனால் ஆயிரக்கணக்கில் போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

அரங்கத்திற்குள் மிகுந்த கட்டுப்படும் இருந்தது,இந்நிலையில் அரங்கத்தில் எதிர்ப்பை காட்டும் விதமாக செருப்பை தூக்கி எறிந்த சிலரை உடனே கைது செய்திருக்கிறார்கள் போலீசார்.

கொல்கத்தா அணியின் ஆட்டம் முடிந்தது- அடுத்து களமிறங்கும் CSK.

சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்துவரும் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் இடையேயான போட்டியில்,முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது நடந்த பரபரப்பான ஆட்டத்தில் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்துள்ளது.அடுத்து களமிறங்கும் சென்னை அணி 203 என்ற இலக்கை எளிதில் எட்டி பிடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது .

ஆட்டத்தின் முதல் ஐந்து ஓவர்களிலே ஐந்து பந்து வீச்சாளர்களை களமிறக்கி டோனி அவருக்கே உரிய வித்யாசமான பாணியில் ஆட்டத்தை வழி நடத்தினார்.16 ஓவர்கள் வரை கொல்கத்தா அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்திருந்தது.பின்னர் ரன்கள் எடுப்பதற்காக துரிதமாக செயல்பட்ட அந்த அணியினர்,விக்கெட் இழப்பை பற்றி கவலை படாமல் ரன்களை விரட்டினர்.

ரவீந்திர ஜடேஜா,ஹர்பஜன் சிங்க்,ஷர்டுல் தாகூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர்,ஷான் வாட்சன் இரண்டு விக்கெட்டு எடுத்துள்ளார். ராபின் உத்தப்பா ரன் அவுட் ஆகியுள்ளார்.ஏழாவது பேட்ஸ்மேன் ஆன ஆண்ட்ரே ரஸ்ஸல் அதிகபட்சமாக 36 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 11 சிக்ஸுகளும்,ஒரு ஃபோறும் அடங்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × two =

*