;
Athirady Tamil News

தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு..!! (படங்கள் இணைப்பு)

0

கண்டி, ராஜவெல பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் 37 வயதுடைய தந்தையான புஷ்பகுமார பிரேமதிலக்க, மகள் நவாஞ்சன பிரேமதிலக்க (வயது – 13), மகன் கயான் பிரேமதிலக்க (வயது – 05) ஆகிய மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்துச் சம்பவம் மின் ஒழுக்குக் காரணமாக இடம்பெற்றிருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கண்டிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பிள்ளைகளின் தாய் மத்திய கிழக்கு நாட்டில் வீட்டு பணிப்பெண்ணாக தொழில் புரிந்து வருகின்றமை குறிப்பிடதக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven − nine =

*